வடிவமைப்பும் தொடர்பாடலும்

By | 6:54 AM
ஒவ்வொரு வடிவமைப்பின் ஊடாகவும் தொடர்பாடல் மேற்கொள்ளப்படுகின்றது. சாதாரண தொடர்பாடல் போல் கருத்து பரிமாற்றம் இடம் பெறாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே கருத்தை மட்டும் வெளிப்படுத்தும்.
இருப்பினும் வடிவமைப்பின் பின்னர் ஒரே வடிவமைப்பு ஒவ்வொருவருக்கு வேறு வேறு விதமான கருத்தாக்கத்ததை ஏற்படுத்துகின்றது. இந்த வேறுபாடு தனிமனிதருக்கு இடையிலான வேறுபாட்டினால் என்பதைப் புரிந்து கொள்ளவும்.
வடிவமைப்பு என்பது அநேக சந்தர்ப்பங்களில் வடிவமைப்பாளர்; செய்யும் ஒரு பொது சனத்தொடர்பாகும். ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் தனிநபர் தொடர்பாடலாகவும் அமைவதுண்டு. உதாரணமாக தனியொருவர் வசிப்பதற்கு அல்லது அணிவதற்காக வடிவமைப்பாளர் வீடு அல்லது ஆடையைக் குறிப்பிடலாம்.  இருப்பினும் குறிப்பிட்ட வீடோ அல்லது ஆடையோ தன்மை நோக்கி பார்ப்பவர்க்கு தன்னிச்சையாக தன்னுடைய கருத்தை வெளிவிடுகின்றது. வடிவமைப்பாளருக்கு இருக்கவேண்டிய முக்கிய பண்புகளில் ஒன்றாக வெளிப்படுத்தும் ஆற்றல் கருதப்படுகின்றது.
தன்னுடைய படைப்புக்களை மொழி மூலம் வெளிப்படுத்தும் கவிஞர், எழுத்தாளர், ஊடகவியலாளர் எவ்வாறு மொழியினை கையாள்வதில் வல்லவர்களாக இருக்க வேண்டுமோ அதேபோல் அழகியலுடன் சம்பந்தப்பட்ட விடயமாகிய வடிவமைப்புக்கு சித்திரம் அல்லது ஓவிய ஆற்றல் முக்கியமாகக் கொள்ளப்படுகின்றது.
ஒவ்வொருவரும் சிறுவயது முதல் வட்டம், நேர்கோடு என்பவற்றை அறிந்தும், வரைந்தும் பழகி
இருக்கின்றோம். வட்டம், நேர்கோடு என்றால் என்ன எனக்கேட்டால் சிறுவர் பெரியவர் வரை
எல்லோருக்கும் ஐயம் இல்லாமல் தெரிந்திருக்கும். ஆனால் எத்தனை பேரால் வட்டம், நேர்கோடு
என்பவற்றை எழுதகருவியால் மட்டும் வேறு எந்தக் கருவியின் உதவியும் இல்லாமல் வரையமுடியும்?
ஒழுங்கான பயிற்சி இல்லாமல் எவராலும் செய்ய முடியாது என்பதே உண்மை “செந்தமிழும் நா பழக்கம் சித்திரமும் கை பழக்கம்” என்ற மரபுச்சொற் தொடர் மிகத் தெளிவாக சித்திரம் என்பது பயிற்சியின் மூலம் பெறப்படலாம் என்பதை வெளிப்படுத்துகின்றது. தான் எண்ணும் கருத்தை வடிவமைப்பிற்கு ஊடாக வெளிப்படுத்துவதற்கு கலை உணரவும் அதனை வெளிப்படுத்த சித்திரம் ஆற்றலும் தொடர்பாடல் ஊடகமாக தேவைப்படுகின்றது.
சித்திரம் எனும் போது இன்றைய காலகட்டத்தில் பலவிதமான கருத்துக்கள் மக்கள், மாணவர் மத்தியில் நிலவுகின்றது. இருப்பினும் இங்கு சித்திரம் எனக்கொள்ளப்படுவது என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
பென்சில், தூரிகை, வர்ணம் என்பவற்றை கொண்டுதான் எண்ணும் எண்ணங்களாக வெளிப்படுத்தும் ஆற்றல் எனக்கொள்ளலாம். வெளிப்படுத்துகை என்பது முற்றுமுழுதாக தனிமனித வெளிப்பாடாக இருக்குமானால் அது நுண்கலை என்ற வகையில் கொள்ளப்படுகின்றது. இவ்வகை வடிவமைப்பிற்கு முற்றுமுழுதாக பொருத்தமானது எனக்கொள்ளமுடியாது. ஒருவர் தன்னை மட்டும் வெளிப்படுத்துவம் அதனை பொதுமைப்படுத்துவதும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுவதில்;லை. மற்றவர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த ஒருவரே சிறந்த வடிவமைப்பாளராக உருவாதற்கு அதிக சாத்தியக் கூறுகள் இருக்கின்றது.
ஒரு பக்கம் வடிவமைக்கும் போது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய பின்னணி வி;டயங்கள்
1. பக்கம் அச்சடிக்கப்படும் அச்சகம்
உதாரணமாக கொழும்பிலோ அல்லது யாழ்ப்பாணத்தில் எந்த அச்சகம் அவர்களுடைய முன்னைய வேலைகள் என்பவற்றை கருத்தில் எடுத்து குறிப்பிட்ட அச்சகத்தின் தரத்தை கவனத்தில் கொள்ளுதல் வெளியீடடின் தரத்தை உறுதிப்படுத்த முடியும்.
2. பிரசுரிக்கப்பட வேண்டிய பக்கம் வர்ணப் பக்கமா அல்லது கறுப்பு வெள்ளையா என்பதைப் பொறுத்து என்ன வகையான தாளில் அச்சடிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கப்பட வேண்டும். சந்தையில் பாவனையில் உள்ள தாள்களின் வகை, அளவு, அவற்றின் தரம் என்பவற்றை அறிந்து வைத்திருத்தல் சரியான முடிவை எடுப்பதற்கு உதவும்.
3. ஒரு படைப்பிற்கு எப்போதும் ஒரு கருப்பொருள் இருக்கவேண்டும். அந்த வகையில் பக்கம் என்ன
கருப்பொருளை வெளிப்படுத்த வேண்டும். அதாவது வடிவமைப்பின் பின்னர் வடிவமைக்கப்பட்ட பக்கம் என்ன கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை வடிவமைப்பாளர் தீர்மானிக்க வேண்டும.
இதனை மேலும் விளங்கிக் கொள்வதற்கு எல்லோருக்கும் புரியக்கூடிய உதாரணமாக கவிதை எழுதும் போது புரட்சி, காதல், வீரம், சோகம் என தெரிந்தெடுக்கப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் கவிதைகள் எழுதப்படுவதை சாதாரணமாக எல்லோரும் அறிந்த ஒரு விடயமாக இருப்பதைக் காணலாம். கவிதை வரிகளை எழுதும:போது மிகக்கவனமாக தெரிந்தெடுக்கப்பட்ட சொற்களைக் கொண்டு கவிஞர் சிறந்த கவிதைகளை எழுதியதையும் எழுதியவற்றை படித்தும் உணர்ந்திருப்பீர்கள். கவிதையை பாடலாக மாற்றப்பட்ட
சந்தர்ப்பங்களில் எழுத்தில் மாற்றப்பட்ட கவிதை வரிகள்.
பொருத்தமான மெட்டு, மெட்டுக்குப் பொருத்தமான வாத்தியக்கருவிகள், எதிர்பார்க்கப்பட்ட பாடலின் உணர்வை மிகச் சிறப்பாக வெளியிடுவதற்கு ஏற்ற குரல்கள் என கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வகையில் ஒழுங்கமைக்கப்படும். கவிதை சிறப்பான அல்லது வெற்றிகரமான பாடலாக மக்கள் மத்தியில் இருப்பதை அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும்.
குறிப்பிட்;ட கவிதை ஒரு இசையமைப்பாளரின் சரியான வடிவமைப்பால் சிறந்த பாடலாக மாறுவதுபோல் படைப்பின் ஒழுங்கு என்பது எப்போதும் ஒரே மாதிரியானவையே. ஆனாலும் வித்தியாசமான படைப்பிற்கு ஏற்ப அதில் பயன்படுத்தப்படும் மூலங்கள் வேறுபடலாம். அதாவது ஒரு சிறந்த கவிதை அதனைத் தொடர்ந்து வந்த கவிதை சிறந்த பாடலாக மாறும் போது
கவிஞன் எண்ணக்கருவை பாடல் வரிகளாக மாற்ற இசையளமைப்பாளன் பொருத்தமான இசைக்கருவிகள், குரல்களைக் கொண்டு முழுமையான பாடல்களாக மாற்றுகின்றான்.
வெற்றிகரமான பாடல் சரியாக ஒலிப்பதிவு செய்வதற்கும் அதனை மீள்பதிப்பு செய்வதற்ம் தொழில் நுட்பம் உதவுகின்றது. மேற்படி பாடல்களின் தயாரிப்பை விளங்கிய ஒரு பக்க வடிவமைப்பை விளங்கிக் கொள்வதற்கு மேற்படி படிமுறைகளின் வழியில் சிந்திக்கும்போது வெளியீட்டிற்கு பொருத்தமான கருவினைத் தீர்மானித்து ஒரு பக்கத்தில் இடம்பெறு; கூடிய பக்க வடிவமைப்பின் மூலங்களான எழுத்து, கோடு, படம், வர்ணம் என்பவற்றைப்பயன்படுத்தி பக்கம் தற்போது கணினியின் உதவியுடன் வடிவமைக்கப்படுகின்றது. வடிவமைக்கப்பட்ட பக்கம் தொழில் நுட்ப விடயங்கள+டாக கையாளப்பட்டு தாள்களில் அச்சடிக்கப்படுகின்றது.
Newer Post Older Post Home