பத்திரிகையில் செல்வாக்குச் செலுத்தும் பக்க வடிவமைப்பு உத்திகள்

By | 6:53 AM
பத்திரிகைகளில் செல்வாக்குச் செலுத்தும் பக்க வடிவமைப்பு உத்திகள் ஒரு செய்தித்தாளின் முதற் பக்கத்தைப் பார்த்த உடனே அது எத்தகைய இதழ் என்று செõல்லி விட முடியும். இது தரமான இதழ், இது பரபரப்பான இதழ், இது துணிகரமான இதழ், இது புதுமையை விரும்பும் இதழ், இது மரபு சார்ந்த இதழ் என்று இதழின் தனித்தன்மையைக் கணி த்து விட முடியும்.
இதற்குக் காரணம் இதழில் காணப்படும் செய்திகள் மட்டுமல்ல: அந்தச் செய்திகள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன, கறுப்பு வெள்ளை நிறங்கள் எந்தெந்த வகையில் பயன்படுத்தப்படுகின்றன போன்றவையுமே. இவற்றை எல்லாம் பார்த்தவுடனனேயே இதழின் இயல்பினை புரிந்து கொள்ளலாம். தலையங்கத்தின் முதற் பக்கத்தின் அமைப்பே ஒரிதழின் அமைப்பின் ஆழுமையினை உருவாக்குகின்றது எனலாம்.
பத்திரிகையின் பக்க வடிவமைப்பு
பாவையை அணி செய்வது போல பக்கங்களையும் செய்திகளால் அணி செய்ய வேண்டும் செய்தித் தாளின் அளவு எழுத்து வகைகள் விதவிதமான தலைப்புக்கள் பொருத்தமான படங்கள், பல்துறைச் செய்திகள், கதைகள், கட்டுரைகள், துணுக்குகள், கருத்துப்படங்கள்   கேலிச்சித்திரங்கள், விளம்பரங்கள் முதலியனவற்றைப் பரவலாகவும் பக்கவாரியாகவும் பொருத்தமு  அமைப்பது பக்க அமைப்புஎனப்படும்.
இதற்கு இதுதான் வரைவிலக்கணம் என்று உறுதியாகக் கூறமுடியாது. பக்க வடிவமைப்பிற்கு வரைவிலக்கணம் இல்லை. பக்க வடிவமைப்பாளர் வாசகர்களின் இலக்குகளை நிறைவேற்றக் கூடிய வகையிலும் சலிப்பூட்டாத
வகையிலும் பக்கங்களை வடிவமைப்புச் செய்வது மிகப்பிரதான கடமையாகும். அத்துடன், தங்கள் பத்திரிகைக்கென நேர்த்தியான பக்க வடிவமைப்புகளைத் தெரிவு செய்வதன் மூலம் பத்திரிகைக்கென்றொரு தனித்துவத்தைப் பேணுதல் பொருத்தமானதாகும். இப் பக்க அமைப்பால் இதழ்களுக்கு, பிற இதழ்களிலிருந்து
வேறுபடுத்திக் காட்டுதல், வாசகர்களை வாங்கத் தூண்டுதல் செய்தல், செய்திகளின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளஉதவி புரிதல் போன்ற பயன்கள்ஏற்படுகின்றன.
“”சிறந்த செய்திகள் இருந்தும் சிறப்பான வடிவமைப்பு இல்லாவிட்டால் பத்திரிகை எடுபடாது” என்று சி.பா.ஆதித்தன் கூறுகிறார்.
அமெரிக்காவில் ஸ்பானிஷ்  அமெரிக்க யுத்தம் நடந்த போது ஜோசப் புலிட்சர், வில்லியம் ராண்டால்ஃப் ஹெர்ல்ட் ஆகியோருக்கு இடையே நிகழ்ந்த விற்  ப னை ப் ÷ ப õ  ரு ம் ப க் க அமைப்பில் புதுமைகள் தோன்றக்காரணமாயின.
கனமான பெரிய எழுத்துக்களில் தலைப்புகள், கவனயீர்ப்பு உத்திகள் எனப் பக்க அமைப்பு மூலம் வாசகர்களை ஈர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தக் காலகட்டத்தில் தோன்றியது தான் மஞ்சள் இதழியல். (Yellow Journalism).  போருக்குப் பின்னர் பரபரப்பு விலகியது; செய்திகளின் அளவு சுருங்கியது. ஆயினும், செய்தித்தாளின் பக்கம் ஓர் ஒழுங்கான திட்டமிடப்பட்ட அமைப்பி னைப் பெற்றது.
தொழில்நுட்ப மாற்றங்களும் பக்க அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளன. மோனோ டைப்பிங்,லைனோ டைப்பிங் முறைகளில்
அச்சுக் கோர்க்கப்பட்ட போது திடமான ஈய அச்சுக்களை “”சேஸ்” எனப்படும் தட்டுக்களில் அடுக்கி வைத்துப் பக்கங்களைக் கட்ட வேண்டியிருந்தது.
கணினியில் தட்டச்சுச் செய்யத் தொடங்கிய பின்னர், பக்கஅமைப்பு எளிதானது. ஆனாலும், செய்தித் தாளைத் தனித்தனியாக வெட்டி, பக்கத்திற்கு ஒட்டித்தான் பக்க வடிவமைப்புச் செய்யப்பட்டது. “”பேஜினேசன்” என்ற உத்திக்குப் பின் கணினித் திரையிலேயே பக்கத்தை அமைப்பது சாத்தியமாயிற்று.
ö வ ட் டு வ  து ம் ஒ ட் டு வ  து ம் இடத்தை மாற்றுவதும் விரிப்பதும் சுருக்குவதும் கணினித் திரையிலேயே நிகழ்கின்றது. தொழில்நுட்பமும் படைப்பாற்றலும் இங்கு இணைகின்றன. பக்க வடிவமைப்பாளர் கலைஞராக இருந்தால் மட்டும் போதாது; கணினியைத் திறமையோடும் ஆர்வத்தோடும் கையாளத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. பக்க அமைப்பு மிகக்குறுகிய காலத்திற்குள் மிகப்பெரிய சிகரங்களைத் தொட்டது
கணினியின் வருகைக்குப் பின்னர் தான். செய்தித் தாளின் பக்க அமைப்பு
இர ண்டு முக்கிய அடிப்படைகளைக் கொண்டது. முதலாவது எழுத்து வடிவம் (Typography), இரண்டாவது அமைப்புத் திட்டம் (Layout) என்பனவாகும்.
த ø ல ப் பு க ள் உ ட ற்  ப  கு தி , முகப்பு ஆகியவற்றுக்கு எந்த வகையான எழுத்து, எந்தெந்த அளவுகளில் என்பன முடிவு செய்யப்படுகின்றன. அதன் பின் கட்டடங்களுக்கு வரைபடம் தயாரிப்பது போல செய்திகள், விளம்பரங்கள், புகைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவை எந்தப்பக்கத்தில், எந்த இடத்தில், எந்த
அளவில் வெளிவரவேண்டும் என்பதற்கான அமைப்புத் திட்டம் தயாரிக்கப்படுகின்றது. செய்தித்தாளின் பக்கம் என்பது ஒரு செவ்வகம். இச் செவ்வகத்தில் படங்களையும் செய்திகளையும் கண்ணுக்கு இதமாகவும் கவனத்தை ஈர்க்குமாறும் ஒழுங்குபடுத்துவது தான் பக்க வடிவøமப்பு எனப்படுகின்றது.
பக்கத்தை வடிவமைப்பதில் ஐந்து வகை  ய õன உத் தி க ள் கையாளப்படுகின்றன. அவை சமநிலை, குவியம், முரண், இயக்கம், ஒருமை என்பனவாகும்.
யாழ்ப்பாணத்தில் பக்க வடிவமைப்பு
15 வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு எழுத்தாக அச்சுக் கோர்த்து பக்கங்களை வடிவமைப்பதற்காக எல்லாப் பத்திரிகை நிறுவனங்களிலும் எழுத்துக் கோர்க்கும் (composing) பிரிவு இருந்தது.
அது அந்த நிறுவனங்களின் ஆசிரிய பீடத்தினையும் விட, பெரியஇடத்தினைப் பிடித்திருந்தது. எழுத்துக் கோர்ப்பவர்கள் ஆசிரிய பீடத்திற்கு அடிக்கடி திரிந்து
பிழை திருத்தங்கள், செய்தி மாற்றங்கள் செய்கின்ற போது அச்சுக்கோர்ப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாக நேரிட்டது.
அந்த வகையில், முதலில் யாழ்ப்பாணத்தில் “உதயதாரகை’ என்னும் தமிழ் ப் ப த் தி ரிகை தோன்றியது. இதன் பிற்பாடு பல தமிழ்ப் பத்திரிகைகள் யாழ்ப்பாணத்தில்  தோன்றின. ஈழநாடு, திசை, முரசொலி, ஈழமுரசு, ஈழநாதம், உதயன், வலம்புரி எனப்பல பத்திரிகைகளும் கொழும்பு மாநகரில் இலங்கை நேசன், தினபதி, தினகரன், வீரகேசரி, தினக்குரல் எனப் பல பத்திரிகைகளும் தோன்றின.
15 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் பத்திரிகைகளின் வடிவமைப்பினை நோக்கின், தொழில்நுட்பங்கள் பின் தங்கிய நிலையில் அச்சுக் கோர்க்கும்
முறையில் பக்க வடிவமைப்புச் செய்யப்பட்டுத் தினசரி வெளிவந்தன. இந்தப் பத்திரிகை வடிவமைப்பில் பெரும்பாலான பத்திரிகைகளின் முன் பக்கத்திலே
எந்த வகையான படங்களையும் பிரசுரிக்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது.
எழுத்துப் பெட்டியில் அதற்கென உள்ள எழுத்து அச்சுக்களை அடுக்கித் தட்டு நிரம்பியபின், அதனை ஒரு மெய்ப்பு (proof) எடுத்து, பிழை திருத்தி,
பக்கங்களை அமைத்து, அச்சுக்கு அனுப்புதல் வேண்டும். கையினால் அச்சுக்கோர்ப்பதால் காலமும் பொருளும் வீணாவதைக் கண்ட மனிதன், தன்னுடைய அறிவியலின் ஆற்றலினால் அச்சுக்கோர்க்கும் இயந்திரங்களைக்
கண்டு பிடித்தான்.
இந்த இயந்திரங்களைத் தனித்தனி அச்சுக்களாக அச்சுக் கோர்க்கும் இயந்திரம் (Mono type machine), வரி வரியாக அச்சுக்கோர்க்கும் இயந்திரம் (Lino type
machine) என இரு வகையாகப்பிரிக்கலாம்.
யாழ்ப்பாணத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த பத்திரிகைகளில் இந்த இயந்திரங்களே பயன்படுத்தப்பட்டன. இப் பத்திரிகைகள் மூலம் உடனடிச் சம்பவங்களின் படங்கள், அச்சுக்கு முந்தி ஏற்படுகின்ற சம்பவங்களை உடனடியாகச் செய்தியாகப் பிரசுரிக்க முடியாத தன்மைபோன்ற நெருக்கடி
கள் ஏற்பட்டன.
ப ட ங்  க ள் ÷ ப õ  டுவ ö தன் ற õ ல் சம்பவப் படங்களை “”புளொக்” செய்து இரண்டு
மூ ன் று ந õ ட்  க ளின் பின்ன÷ ர பிரசுரிக்கக் கூடிய சூழ்நிலை அச்சுக்கோர்க்கும் இயந்திரங்களினூடாக வெளிவந்த பத்திரிகைகளில் காணப்பட்டது.
வ õ  ச  க ர்  களை வாங் க த் தூண்டும் விதத்தி ல் ப க்  க ங்  க ø ள அமை  க் க முடியாதுள்ளது. முதற் பக்கத்தைப் பார்க்கும் போது படங்கள் இன்றி முழுமையாக எழுத்துக்களால் நிரப்பப்பட்டிருக்கும். குறிப்பிட்ட ஒவ்வொரு செய்திக்கும் இடையில் பெரிய இடைவெளிகளைக் காண முடியாது. இதனால்,
வாசகர்கள் வாசிக்கும் போது கண் உளைச்சல், தொடர்ந்து வாசிக்க முடியாத சோர்வு போன்ற அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வந்தனர்.
இந்தக் குறைபாடுகளைக் களைவதற்காக வெளிநாடுகளில் பத்திரிகை வடிவமைப்புக்கெனக் கணினி மென்பொருட்கள் உருவாக்கப்பட்டன. அதாவது கச்ஞ்ஞுட்ச்டுஞுணூ, இணிணூஞுடூ ஞீணூச்தீ போன்ற மென் பொருட்கள் மூலம் வடிவமைக்கப்பட்டு வாசகர்களைக்கவரக் கூடிய புதிய தோற்றத்தில் வெளிவந்த பத்திரிகைகள் தமக்கென ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டன.
நாகரிகம் வளர வளரத் தொழில்நுட்பங்களும் பரிணாம வளர்ச்சியடைந்து இன்றைய பத்திரிகைகள் வர்ணங்களிலும் வாசகர்களை இலகுவில் கவரக்கூ
டிய வகையிலும் Pagemaker, Corel draw Illustrator, In Design போன்ற புதிய கணினி மென்பொருட்களைப் பயன்படுத்திப் பக்கங்களை அமைத்து Offset machines, Wep machines போன்ற நவீன இயந்திரங்கள் மூலம் வெளியிடப்படுகின்றன.
அத்துடன், இணையத்திலும் (Internet) தமக்கான தளங்களை (Website) அமைத்து செய்திகளை வெளியிடுகின்றன. பத்திரிகைகள் பக்க வடிவமைப்பு மாறாமல் மின்னியல் பத்திரிகையாகவும் (epaper) பதிவேற்றம் செய்யப்படுகின்றன. கணினி மூலம் பக்க வடிவமைப்புச் செய்
வதனால் நேர விரயம் தடுக்கப்படுகிறது. அத்துடன், பிந்திய செய்திகள், புகைப்படங்கள் போன்றவற்றை உடனுக்குடன் பிரசுரிக்கக் கூடிய வகையில்
தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது. இ வ் வ õறான நவீன தொழில் நுட்பங்கள் யாழ்ப்பாணத்தில் வெளிவரும் பத்திரிகைகளில், எவ்வளவு
ஆதிக்கம் செலுத்தியுள்ளன என்பதை நோக்குகையில், சற்றுப்பின் தங்கியுள்ளது என்றே சொல்லலாம். வெளிநாட்டில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு (Eg: Page
maker) பதிலாக, புதிய கணினி மென்பொருள் பதிப்புகள் ((Eg: Indesign) வெளியிடப்பட்டிருந்தும் இன்று பழைய மென் öபாருளே சில பத்திரிகைகளில் பக்க வடிவமைப்பிற்காகப்  பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன்,
பக்க அமைப்பானது 15 வருடங்களுக்கு முன்பு வந்த பத்திரிகைகளைப் போன்றே
வெளிவருவதை அவதானிக்கக் கூடியதாகவும் உள்ளது. உதாரணமாக, ஒரு பத்திரிகையின் முன் பக்க அமைப்பினை ஆய்வு செய்வோமானால், பிரதான தலையங்கம் கறுப்பு வெள்ளை எழுத்தில் போடப்பட்டிருக்கும் அல்லது கடும் வர்ணத்தில் போடப்பட்டிருக்கும். செய்திகளுக்கு வெவ்வேறு எழுத்து வடிவங்கள் (Fonts) பயன்படுத்தப்பட்டிருக்கும். புகைப்படங்கள்
தேவையற்று  மிகப் பெரியதாகப் போடப்பட்டிருக்கும். இடத்தை நிரப்புவதற்காக அல்லது வாசகர்கள் ஒரே பார்வையில் பார்ப்பதற்காக நிறைய செய்திகளை முதற்
பக்கத்திலேயே அமைப்பார்கள். இவ்வாறான பக்க வடிவமைப்பு அந்த நிறுவனத்தின் பத்திரிகை விற்பனையைப் பாதிக்கின்றது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
எனவே, பக்கங்களை  வடிவø மக்கும் போது, வாசகர்கள் தான் எமது சொத்து; ஆதலால், அவர்களின் வாசிப்புத்திறனுக்கு ஏற்ப அமைக்க வேண்டுமென்
பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். பக்க வடிவமைப்பாளருக்கும் அத்துறையில் அனுபவமும் ஆற்றலும் இருந்தால் தான் பக்கங்களைக் கவர்ச்சியாகஅமைக்க முடியும்.
பத்திரிகை ஆசிரியரினால் இந்தச் செய்தி, இந்தப் படம், என்ன எழுத்து அளவு, என்ன நிறம், எந்த எந்த இடத்தில் வரவேண்டும் என்று குறிக்கப்பட்ட பத்திரிகை டம்மி (Dummy) வடிவமைப்பாளரிடம் வழங்கப்படும். இதனைப் பயன்படுத்தி
வடிவமைப்பாளர் தனது திறமையினால் மேலும் மெருகூட்டி நல்லதொரு பக்கத்தினை உருவாக்கமுடியும்.
இன்றைய தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த நிலையில், பத்திரிகை நிறுவனங்கள் ஒவ்வொரு வாசகனும் எதை விரும்புகின்றான், ஒரு வாசகனுக்கு எவ்விதத்தில் சென்றடைய வேண்டும், எந்த மாதிரிப் பக்கங்களை அமைத்தால் இலகுவில் சென்றடையும், செய்திகள், படங்களில் எது முக்கியமானது, எது தேவையற்றது என்பதைக் களைந்து வாசகர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி, சிறந்த பக்க வடிவøமப்பைப் பேணுவதன் மூலம் வாசகர் மட்டத்தில் தமக்கென
ஒரு நிலையான இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை.
த. சர்வேஸ்வரன், மாணவன், ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையம், யாழ். பல்கலைக்கழகம்.
http://tamiljournalism.wordpress.com/
Newer Post Older Post Home